2.5 தொகுப்புரை     

    இப்பாடத்தின் கீழ், எழுத்து வருகை வரலாறு பற்றிப் படித்தீர்கள். அவ்வெழுத்துகள் சங்க காலத்தில் சொல்லில், (மொழியில்) எவ்வாறு அமைந்து வந்தன என்பது பற்றி நன்கு புரிந்து கொண்டீர்கள். அவ்வாறாக அமைந்து வரும் எழுத்துகள் இடைக் காலத்தில் எவ்வாறு இருந்தன என்பது பற்றியும், எவ்வெழுத்துகள் மொழியின் வருகையின்போது வழக்கு ஒழிந்தன என்பது பற்றியும் படித்து உணர்ந்தீர்கள். தற்காலத் தமிழில் பிற மொழிகளின் செல்வாக்கு, மரபு இலக்கணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதைப் பற்றி அறிந்து கொண்டீர்கள். இவற்றோடு தற்காலத்தமிழை அடையாளம் கண்டுகொள்வது பற்றி மொழியியலார் கூறும் கருத்துகளையும் புரிந்துகொண்டீர்கள்,

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
எவ்வாறான காரணங்களால் ஒரு மொழியில் மாற்றம் ஏற்படுகிறது?
2.
சமூக மொழியியலார் கூறும் இரண்டு வகைக் கருத்துகள் யாவை?
3.
‘மாணவர்கள்’ என்ற சொல்லைத் தற்காலத்தமிழில் எவ்வாறு கூறுகின்றனர்?
4.
எவ்வெழுத்துச் சொல்லின் முதலில் ஒருவிதமாகவும் இடையில் வேறுவிதமாகவும் வருகிறது?