இப்பாடம் எழுத்து வருகை (phonemic
distribution)
என்பது பற்றி விளக்குகிறது. ஒரு சொல்லில் ஓர் எழுத்தானது
எவ்வாறான இடங்களில் (முதல், இடை, கடை)
அமைந்து
வருகின்றது என்று தெரிவிக்கிறது. மெய் எழுத்துகள் எவ்வாறான
உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து
வருகின்றன என்றும்
விளக்குகிறது.
சங்ககாலம்,
இடைக்காலம், தற்காலம் ஆகிய
முக்காலங்களிலும் அனைத்து உயிர் எழுத்துகளும் மொழிமுதலில்
வருகின்றன என்றும், குறிப்பிட்ட மெய் எழுத்துகள்
மட்டும்
மொழியின் இறுதியில் வருகின்றன என்றும் விளக்குகிறது.
இடைக்காலத்தில்
கிரந்த எழுத்துகள் தமிழில்
புகுந்தமையை விளக்கிக் காட்டுகிறது. தற்காலத்தில் பிறமொழிச்
சொற்கள் அதிகமாகத் தமிழில் கலந்துவிட்டதால்
கிரந்த
எழுத்துகளின் செல்வாக்கு அதிகமானது பற்றியும், அவற்றின்
வருகையைப் பற்றியும் நன்கு விளக்குகிறது.
இவற்றுடன் தற்காலத் தமிழை எவ்வாறு அடையாளம்
கண்டு கொள்ளலாம் என்பது பற்றி மொழியியலார்
கூறும்
கருத்துகளையும் குறிப்பிடுகிறது.