|
பழங்காலத்தில்
தோன்றிய தொல்காப்பியம், இடைக்காலத்தில்
தோன்றிய நன்னூல், வீரசோழியம் போன்ற இலக்கண நூல்கள் புணர்ச்சிக்கு
எவ்வாறான முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன என்ற செய்தி
நமக்குக் கிடைக்கப் பெறுகிறது.
-
மரபிலக்கணங்கள்
பொதுவாக அதிகக் கவனத்தைப் புணர்ச்சி விதியில் ெசலுத்தியுள்ளன
என்றும், தற்காலத்தில் எழுந்த மொழியியல் நூல்களில்
கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், மு.வ.வின்
மொழிநூல், இன்னும் சில நூல்கள் புணர்ச்சிக்காக ஒரு
சிறுபகுதியை மட்டுமே ஒதுக்கியுள்ளன
என்றும் அறியமுடிகிறது.
-
தற்காலத்தில்
மனிதன் பல சமூகத்தினரோடு பழகுவதால் அவனுடைய கலாச்சாரத்திலும்
மொழியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதும்,
அம்மாற்றங்கள் புணர்ச்சி இலக்கணத்திலும் ஏற்பட்டு
வருகின்றன என்பதும் தெரியவருகின்றன.
-
இவற்றோடு
மரபிலக்கணப்படி புணர்ச்சி விதிகள் அமைக்கப்பட்டன என்பதும்,
அவ்விதிகளில் சில தற்காலச் சூழலில் சிறிது சிறிதாக
வழக்கொழிய ஆரம்பித்துள்ளன என்ற செய்தியும், புதிய
புணர்ச்சி விதிகள் சில தோன்றி நிலைபெறத் தொடங்கின
என்பதும் நமக்கு இப்பாடத்தின் மூலம் தெரியவருகின்றன.
|