6.0 பாட முன்னுரை

    இப்பாடத்தில் எழுத்தின் தன்மை பற்றியும், எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? என்பது பற்றியும் காண இருக்கிறோம். இவற்றோடு எழுத்துச் சீர்திருத்தத்திற்கான விளக்கமும் பெற இருக்கிறோம். ஓவிய எழுத்து முறை, ஒலிசார் எழுத்து முறை ஆகியன பற்றிக் காண இருக்கிறோம்.

    சங்ககாலம் முதல் தற்காலம்     வரை தமிழில் மேற்கொள்ளப்பட்ட எழுத்துச் சீர்திருத்தப் பணிகளைத் தக்க சான்றுகளுடன் இப்பாடம் விரிவாக விளக்குகிறது. ஒரே காலகட்டத்தில்     மூன்று வகையான எழுத்து முறைகள் அருகருகே பயன்படுத்தப்பட்டு வந்ததை விளக்குகிறது. உலகில் பல மொழிகளில் குறிப்பாக வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் எழுத்துச் சீர்திருத்தம் இன்னும் நடைபெறுகிறது என்பதை அறிய இருக்கிறோம்.