6.2 எழுத்தின் தன்மை |
|
ஒவ்வொரு மொழிக்கும் அதன் குறியீடான எழுத்து ஒரு கருவியாக அமைகிறது. அக்கருவி மற்ற கருவிகள் போல் அமையவில்லை. எவ்வாறு எனில் ஒரு கருவி அதனைப் பயன்படுத்தப் பயன்படுத்த வீணாகிறது. ஆனால் இவ்வெழுத்து எனும் கருவி என்றென்றும் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. ஏன்? நாம் அக்கருவியை நம் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றம் செய்து பயன்படுத்தி வருகிறோம். ஆகையால் இவ்வெழுத்தின் தன்மை, பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் விளங்குகின்றது. |