6.3 எழுத்துச் சீர்திருத்தம் ஏன்?

     ஒரு மொழியின் எழுத்தைச் சமூகத் தேவைக்கு ஏற்பவும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்பவும் திருத்தம் செய்து கொள்ளலாம். கலாச்சார மாற்றத்தால் புதிய எழுத்துகளை ஏற்றுக் கொள்ளலாம் (ஜ், ஷ், க்ஷ், ஸ், ஹ், ஸ்ரீ).

     நாடு வளம் பெற எழுத்துமொழியை எளிமைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதற்குத் தகுந்தாற்போல் எழுதுபொருளிலும், எழுதும் முறையிலும் ஏற்பட்ட தொழிலியல் வளர்ச்சி, எழுத்து முறை பற்றிய சிந்தனைகளைத் தெளிய வைத்தது எனலாம். அதுவே எழுத்துச் சீர்திருத்தத்திற்கு ஒரு புதிய வேகத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.