2.6 விளிவேற்றுமை இவ் வேற்றுமைக்கென்று தனி ஒரு வேற்றுமை உருபு ஏதும் கிடையாது. பெயர்ச்சொற்களின் ஈறு அடையும் திரிபினால் இது உணர்த்தப்படுகிறது. 'அழைத்தல்' என்பது இவ்வேற்றுமையின் பொருள். இதற்கு அமைந்த 'விளி'யென்னும் பெயராலேயே இன்றுவரை அழைக்கப்படுகிறது.
அவைதாம் இதற்கு 'எட்டாம் வேற்றுமை' என்ற பெயரும் உண்டு. விளி வேற்றுமைக்கும் பிற வேற்றுமைக்கும் வேறுபாடு உண்டு. பிற வேற்றுமைகள் சொற்றொடரில் காணப்படும் பொருள்தொடர்பைக் காட்டுவன. ஆனால் விளி வேற்றுமைக்கும் வினைச்சொல்லுக்கும் எந்தவிதமான பொருள் தொடர்பும் கிடையாது. விளிவேற்றுமை சொற்றொடரின் அக உறுப்பாக இல்லாமல் புற உறுப்பாகவே உள்ளது. கண்ணா ! நீ எங்கே போகிறாய்? என்பதில் ‘நீ எங்கே போகிறாய்?’ என்பதே வாக்கியம். நீ- எழுவாய். எங்கே போகிறாய்?- பயனிலைத்தொடர். கண்ணா என்று ‘விளி’ வாக்கியத்திற்கு வெளியே உள்ளது. சான்று:
'தோழீ இ
(அகநானூறு.352:1) இடைக்காலத்தில் இது எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் முன்பு இருந்ததுபோலவே வழங்கப்பட்டு வந்தது. சான்று: கோத்தும்பீ (திருவாசகம், திருக்கோத்தும்பி.10:10) 'காள்' என்னும் சொல்லும் விளியைக் குறிக்கப் பயன்பட்டது. சான்று: மாமுகில்காள் சான்று: 'கண்ணா!' இவ்வாறாக விளி வேற்றுமை யாதொரு வேற்றுமை உருபையும் ஏற்காது அழைத்தலில் வருகிறது. அதே சமயத்தில் பெயர்ச் சொல்லில் ஒரு சில எழுத்து மாற்றங்களுடன் வருவதுண்டு. வேற்றுமைகளின் வளர்ச்சி அட்டவணை
|