பாடம் - 2
D04122 வேற்றுமை உருபுகளும் பன்மை விகுதியும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

     இப்பாடம் சங்ககாலம், இடைக்காலம், தற்காலம் ஆகிய காலங்களாகப் பிரிக்கப்பட்டு அக்காலகட்டங்களில் வழக்கிலிருந்த வேற்றுமை உருபுகளைப் பற்றி விளக்குகிறது. தமிழில் உள்ள வேற்றுமை உருபின் வளர்ச்சியை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழ் மொழியில் எத்தனை வகையான வேற்றுமைகள் இருந்தன என்பது பற்றிய செய்திகளை அறியலாம்.
  • தொல்காப்பியத்திற்கு முன் எத்தனை வேற்றுமைகள் இருந்தன, தொல்காப்பியர் எத்தனையாகப் பிரித்துக் கையாண்டார் என்ற செய்தியை அறியலாம்.
  • மொழியியல் அடிப்படையில் பாடம் அமைந்துள்ளதால் உருபன் - உருபு - மாற்றுருபு - சூனிய உருபு போன்றவைகளின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
  • வேற்றுமைக்கு எவ்வாறு பெயர் அமைந்தது என்பது பற்றிய செய்தியை அறியலாம்.
  • தற்காலத்தில் எத்தனை வேற்றுமைகளாக மொழியியலார் பிரித்துக் கையாளுகிறார்கள் என்பது பற்றி அறியலாம்.
  • இவைகளோடு ‘கள்’ என்னும் பன்மை விகுதி சங்க காலம், இடைக்காலம், தற்காலம் ஆகிய முக்காலங்களில் எவ்வாறு பயன்பட்டு வந்தது என்பது பற்றி அறியலாம்.

பாட அமைப்பு