4.1
வினைச்சொல்லும் அதன் உள்ளமைப்பும்
காலம்
காட்டும் இடைநிலைகளைப் பற்றி விரிவாகக் காண்பதற்கு முன்பு, சொல்பாகுபாட்டில்
வினைச்சொல் பெறும் இடம், வினைச்சொல்லின் இலக்கணம், வினைச்சொல்லின் உள்ளமைப்பு
முறை ஆகியவற்றைப் பற்றிக் காண்போம்.
4.1.1
சொல்பாகுபாட்டில் வினைச்சொல்
பழந்தமிழ்
இலக்கண நூலாசிரியர்கள் சொல்லைப் பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகையாகப் பிரித்தனர். இவற்றுள் பெயர்ச்சொல்,
வினைச்சொல் ஆகிய இரண்டுமே முதன்மையானவை; ஏனைய இடைச்சொல்லும் உரிச்சொல்லும்
அவ் விரண்டையும் சார்ந்து வழங்குபவை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
இதனை,
சொல்எனப்
படுப பெயரே வினைஎன்று
ஆயிரண்டு என்ப அறிந்திசி
னோரே
(தொல்.சொல். 160)
இடைச்சொல்
கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப
(தொல்.சொல். 161)
என்ற நூற்பாக்களால் அறியலாம்.
தமிழ்
மொழியில் மட்டுமன்றி உலக மொழிகள் பலவற்றிலும் பெயர்ச்சொல்லும்
வினைச்சொல்லுமே முதன்மையான சொல்வகைகளாகக் கூறப்பட்டுள்ளன.
தமிழைப் போலவே பழமை வாய்ந்தது கிரேக்க மொழி. இம்மொழியில் உள்ள சொற்களைப்
பிளேட்டோ என்ற அறிஞர் பெயர், வினை
என இரண்டாக மட்டுமே பகுத்தார். அவருடைய மாணவரான அரிஸ்டாட்டில் பெயர்,
வினை என்பனவற்றோடு, முன்னிடைச்சொல் (preposition), இணைப்புச்சொல்
(conjunction) என இரண்டையும் சேர்த்துச் சொற்களை நான்கு வகையாகப் பகுத்தார்.
எல்லா மொழிகளிலும் சொல்பாகுபாட்டில் வினைச்சொல், பெயர்ச்சொல்லை அடுத்தே கூறப்பட்டுள்ளது.
எனினும் இலக்கண உலகில் வினைச்சொல் பெயர்ச்சொல்லினும்
ஆற்றல் வாய்ந்ததாகவும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாகவும் விளங்குகிறது.
4.1.2
வினைச்சொல்லின் இலக்கணம்
வினைச்சொல்
ஒரு பொருளினது தொழிலை அல்லது செயலைக் குறிக்கும்; பால், எண் போன்றவற்றைப்
பெரும்பாலும் உணர்த்தும்; வேற்றுமை உருபுகளை ஏற்காது; காலத்தைக் காட்டும்.
இதுவே வினைச்சொல்லின் இலக்கணமாகும். இவற்றுள் வேற்றுமை உருபு ஏற்காமையும்
காலம் காட்டுதலும் வினைச்சொல்லின் தலைசிறந்த இலக்கணங்கள் ஆகும். இதனைத் தொல்காப்பியர்,
வினைஎனப்
படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்
(தொல்.சொல். 198)
என்று
குறிப்பிடுகிறார். வினைச்சொல் மட்டுமே காலம் காட்டுவதால் அச்சிறப்பு நோக்கி,
அச்சொல்லைக் காலக்கிளவி (கிளவி-சொல்)
என்றும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (தொல்.சொல்.
21).
4.1.3
வினைச்சொல்லின் உள்ளமைப்பு (verb structure)
இத்தலைப்பின்
கீழ் ஒரு வினைச்சொல்லில் எத்தனை கூறுகள் இடம்பெற்றுள்ளன என்பது பற்றி அறிந்து
கொள்ளலாம். மேலும் ஒரு செயலை அல்லது தொழிலை எக்காலத்தில் முடிக்கின்றது என்பது
பற்றிய செய்தியையும் அறிந்துகொள்ள முடிகிறது.
வினைச்சொற்களின்
அமைப்பு மொழிக்கு மொழி வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
சான்றாக ஆங்கில மொழியின் வினைச்சொல் அமைப்பு தமிழ்மொழியின்
வினைச்சொல் அமைப்பிலிருந்து மாறுபட்டது.
ஆங்கில மொழியின் வினைச்சொல்லில் காலம் காட்டுவதற்காக
வரும் உருபு (தமிழில் உள்ள கால இடைநிலை போன்றது) இறுதியில் வரக்காண்கிறோம்.
சான்று:
alter
- ed
ஆனால்
தமிழ்மொழியில் வினைச்சொல்லின் நடுவில் காலஇடைநிலை வரக் காணலாம்.
சான்று:
உழு
- த் - ஆன் = உழுதான்
ஆங்கில
மொழியில் காலம் காட்டும் உருபுகளை அடுத்து விகுதிகள் இல்லை எனலாம்.
சான்று:
He
altered - 
ஆனால்
தமிழ்மொழியில் காலம் காட்டும் இடைநிலைகளை அடுத்து விகுதிகள் உள்ளன.
சான்று:
விழு
+ ந்த் + ஆன் = விழுந்தான்
இங்கு
ஆன் என்னும் விகுதி ஆண்பால் ஒருமை விகுதியாக வந்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறு ஒவ்வொரு மொழியின் சொல்லமைப்பும் வேறுவேறாக இருக்கும். அதோடு ஒவ்வொரு
மொழியிலும் ஒரு குறிப்பிட்ட அமைப்பைக் கொண்டு வினைச்சொற்கள்
இருக்கக் காணலாம்.
குறிப்பிட்ட
ஒரு ஒட்டுக்குப் பின்னரே இன்னொரு ஒட்டு வரும். மாறிமாறி வருவது என்பது முடியாத
ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ் மொழியில் வினைச்சொற்களின் உள்ளமைப்பு ஒரு
குறிப்பிட்ட வரிசையில் அமைந்துள்ளது. வினைப்பகுதி முதலில் வர அதை ஒட்டிப்
பின்னர் பல்வேறு ஒட்டுகள் வரக் காண்கிறோம்.
வினை
+ கால இடைநிலை + ஒட்டுகள் (விகுதிகள்)
சான்று:
செய் + த் + ஆன் = செய்தான்
செய்
+ கிறு + ஆன் = செய்கிறான்
செய்
+ வ் + ஆன் = செய்வான்
இங்கு
முதலில் வினைப்பகுதி, அதையடுத்துக் கால இடைநிலை, அதனை அடுத்து எண், பால்
காட்டும் விகுதி வருகின்றது. இது மாறிமாறி வராது. மொழியியலார் இவ்வாறு ஒவ்வொன்றாகப்
பிரித்துக் கையாளுகிறார்கள். கால இடைநிலையும் மூன்று நிலையில் இருக்க அதனை
விளக்க,
வினை + |
 |
இறந்தகாலம் |
 |
+ விகுதி |
நிகழ்காலம் |
எதிர்காலம் |
என்றார்கள் மொழியியலார் (linguists).
ஒரு வினைச்சொல்லில் இறந்தகாலமோ அல்லது நிகழ்காலமோ அல்லது எதிர்காலமோ வரலாமேயன்றி
மூன்றும் இணைந்து வரலாகாது எனலாம். |