துணைவினைகள் (Auxiliary verb) சங்க காலத்திலிருந்து
இடைக்காலம் வழியாகத் தற்காலத்தில் வளர்ந்துள்ள
நிலைகளையும் பெற்றுள்ள மாற்றங்களையும் தகுந்த
சான்றுகளுடன் இப்பாடத்தில் காணலாம். சங்ககால
இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட ஒருசில துணைவினைகள்
மறைந்து போயின. ஒரு துணைவினை, சொற்றொடருக்குச்
சொற்றொடர் வேறு வேறு பொருளை உணர்த்தி வருகின்றது.
புதுப்புது எண்ணங்களால் புதிய சொற்கள் உருவாகின்றன ; அதே
சமயம் அவ்வாறு உருவாகிய சொற்களில் ஓரிரண்டு சொற்கள்
மட்டும் நிலைத்து நிற்கின்றன. ஆக மொத்தத்தில் படிப்படியாக,
சங்க காலம் முதல் இடைக்காலம் வழியாகத் தற்காலத் தமிழில்
பயன்பட்டு வரும் துணைவினைகளின் பட்டியல் நமக்குக்
கிடைக்கப்பெறுகின்றது. தற்காலத் தமிழில் துணைவினைகளின்
எண்ணிக்கையும் அவற்றின் ஆட்சியும் மிக அதிகம். |