பாடம் - 6

D04126 பெயரடை. வினையடை வளர்ச்சி வரலாறு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

          பழங்காலம் முதல் தற்காலம் வரை தமிழ்மொழியில் எத்தனை வகையான இலக்கணக் கூறுகள் இருந்தன என்பது பற்றி விளக்குகின்றது.

     பெயரடை, வினையடை ஆகிய இவற்றின் வளர்ச்சி எவ்வாறு எல்லாம் இருக்கின்றது என்பது பற்றியும் விளக்குகின்றது. இதன்மூலம் தமிழ்மொழி ஒரு வளரும் மொழி என்றும் தெரிந்துகொள்ளச் செய்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பெயரடைகள்,     வினையடைகள்     எவ்வாறான சொற்களிலிருந்து வளர்ந்து வந்தன என்பது பற்றி விளக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.
  • மரபு இலக்கண முறைப்படி பிரித்த உரிச்சொல்தான் பிற்காலத்தில் பெயரடைகளாவும் வினையடைகளாகவும் வந்துள்ளது என்பதையும் உரிச்சொல் பெரும்பாலும் பண்பையே உணர்த்துகின்றது என்ற செய்தியையும் அறியலாம்.
  • பெயரடை ஒரு வரலாற்றின் அடிப்படையில் வளர்ந்த ஒன்று என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
  • சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் பெயரடை வடிவங்கள் மூன்று வேறு நிலைகளில் வழங்கியமையைச் சான்றுகளுடன் அறிந்து கொள்ளலாம்.
  • தற்காலத்தில் பெயரடை, வினையடை ஆகியவற்றில் எத்தனை வகைப்பாடுகள் இருக்கின்றன என்பதைத் தக்க சான்றுகளுடன் அறிந்து கொள்ளலாம்.
  • வினையடை சொல்லுருபு போலச் சில இடங்களில் பயன்பட்டு் வருவதை ஆதாரங்களுடன் காணலாம்.

பாட அமைப்பு