|
1.1 சொற்பொருள்
- வரையறை:
பொருள் எனும் சொல், உண்மை,
குணம், சொல்லின்
பொருள், தலைமை, பணம், தத்துவம், கடவுள், வீடுபேறு,
நூற்பயன் நான்கில் ஒன்று, பல பண்டம், பிள்ளை, பொன்,
உண்மைக் கருத்து, காரியம், மெய்ம்மை, அறிவு, கொள்கை, பயன்,
தந்திரம், உறுதி, அகமும் புறமுமாகிய திணைப்பொருள், பொருள்
நூல், உவமேயம், காரியம், தருமம், தன்மை ஆகியவற்றைக்
குறிக்கும். (கழகத் தமிழ் அகராதி)
மொழிக்கோட்பாட்டில் பொருள் (meaning) என்பதை
விளக்குவது மிக எளிதல்ல. இருப்பினும் பொருள் என்பதை, ஒரு
வகையினுள்
அடக்க முயற்சி செய்யலாம். அது கீழ்க்காணுமாறு
அமையும்:
1. |
(சொல்லின்) பொருள் |
2. |
செல்வம், சொத்து |
3. |
உள்ள பொருள் |
4. |
வீட்டுச் சாமான், தட்டுமுட்டு. |
5. |
உண்மை |
6. |
தங்கம் |
7. |
குழந்தை |
பொருள்
என்பதற்குரிய விளக்கங்களில் மேலும் சிலவற்றைக் கீழே
காணலாம்.
|
1. |
(பொருளின் - வஸ்துவின்) உண்மைத் தன்மை |
|
2. |
அகராதி சுட்டும் பிறபொருள்கள் (வேறு
சொற்கள்) |
|
3. |
சொல் குறிக்கும் பொருள் (The connotation of a word) |
|
4. |
ஓர் அமைப்பில் ஒரு பொருளுக்குரிய
(வஸ்து)
இடம் (The place of anything in a system) |
|
5. |
எதிர்காலத்தில் ஒரு
செயலால் ஏற்படும் விளைவு
(The practical consequences of a thing in
our future experience) |
|
6. |
ஒருவன் (சொல்பவன்) குறிப்பிடும் பொருளின்
குறியீடு (That to which the user of a
symbol actually refers) |
|
7. |
ஒருவன் (சொல்பவன்) குறிக்கும் சொல்
உண்மையில் குறிப்பிட வேண்டிய பொருள்
(That to which the user of a symbol
ought to be referring) |
|
8. |
ஒருவன் தான் குறிப்பிடுவதாக நம்பிக்
கூறும்
(பொருள்) குறியீடு (That to which the user
of a symbol believes himself to be
referring) |
|
9. |
கேட்போன் அந்தக் குறியீடு சுட்டுவதாகக்
கருதுவது (That to which the interpreter of
a symbol thinks it refers)
|
(அ) |
குறிப்பிடும் பொருள்
(refers) |
|
|
(ஆ) |
தான் கருதும் பொருள்
(believes himself
to be referring) |
|
|
(இ) |
சொல்பவன் குறிப்பிடுவதாகத்
தான்
கருதுவது (believes the user to be
referring.) |
பொருள் (meaning) என்றால் என்ன? என்ற வினாவிற்கு
நேரடியாக விடை கூற இயலாமைக்குச் சொற்பொருளியல்தான்
காரணம் என்று
கூறுவதைக் காட்டிலும், அச்சொற்பொருளியலின்
பல்வேறு அணுகுமுறைகள்தான் காரணம் என்று
கூறலாம்.
இச்சொல்லும் பொருளும் குறித்துப் பல மொழியியலாளர் தம்
கருத்தைத் தெரிவித்தபோதும்,
உரிய விடை கிடைத்ததா? என்றால்
இல்லை என்றே கூறலாம். ஆனால், இக்கோட்பாட்டை
மிகவும்
ஆழ்ந்தும், கூர்ந்தும் நோக்க அவர்கள் முயற்சி செய்திருப்பது
மகிழ்ச்சிக்குரிய
ஒன்றாகும்.
|