இந்தப் பாடம் சொற்பொருளுக்குரிய வரையறையையும்,
விளக்கத்தையும் புலப்படுத்துகிறது. சொற்பொருள் குறித்துத்
தமிழ் இலக்கண நூல்கள் கூறும் செய்திகளையும், சொல்லுக்கும்
பொருளுக்கும் உள்ள தொடர்புகளையும் எடுத்துக் கூறுவதாக
இப்பாடம் அமைந்துள்ளது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
சொல், சொல்லின்பொருள்
ஆகியவை பற்றியும், சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள
தொடர்பு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
சொல்லுக்குரிய
பொருள் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்திருப்பதையும்
தெரிந்துகொள்ள இயலும்.
சொற்பொருளின் பொதுவான
வகைப்பாடுகளையும், பாமர் (F.R. Palmer)
வரையறுத்துள்ள சொற்பொருளியல் வகைப்பாட்டினையும் அறிந்து
கொள்ளலாம்.