|  
  3.5 சொற்பொருள் மாற்றத்தில் இயைபும் எதிர்நிலையும் 
      இவ்வாறு     சொற்கள் பலபொருள் வேறுபாட்டை
 
 அடையும்போது, ஒரு சில சிறப்பியல்புகள் ஒரு பொருளைக்
 குறிக்கும் போதே அதனோடு தொடர்புடைய வேறொரு
 பொருளையும் குறிக்கலாம்; அல்லது அதற்கு எதிரானதொரு
 பொருளையும் குறிக்கலாம்.     இவ்விரண்டையும் முறையே
 சொற்பொருள் இயல்பு மற்றும் சொற்பொருள் எதிர்நிலை என்ற 
 இரு தலைப்புகளில் கீழ்வருமாறு காணலாம்.
 
 
 3.5.1 சொற்பொருள் இயைபு   
     சொல்லினது பொருள் வேறுபாடுகளைப் பற்றிப் பல்வேறு
 தலைப்புகளில் கண்டு வருகிறோம். தமிழ் இலக்கணத்தில் 
 
 ஆகுபெயர் எனக் குறிக்கப்படும் ஓர் இலக்கணக் கூறு
 சொற்பொருளோடு தொடர்புடையது. ஒரு சொல் ஒரு பொருளைக்
 குறிக்க, அதோடு தொடர்புடைய பிறிதொரு பொருளோடு இயைந்து
 பொருள்கொள்ள வருவதே ஆகுபெயராகும்.
 
     எ.கா :
		
 
     தோகை
 
     இச்சொல் பெண்ணின் பெயராக வழங்கப்படுகிறது. தோகை
 என்ற இச்சொற் பொருளில் பெண்ணைச் சுட்டும் குறியீடு
 எதுவுமில்லை. பின் எப்படித் தொடர்பு உண்டானது?
 
     தோகை < தொங்கு < தூங்கு < துடி < உழல்
 
     தோகை   வால் என்னும் பொருள்
 
     தோகை   தூங்கும் அது தோகையானது.
 
 இத்தோகை என்ற சொல், சிறப்புக்கருதி வாலை உணர்த்த,
 சார்பினால் அவ்வாலையுடைய மயிலைக் குறித்தது. பின் கவிஞர் 
 தம் கவிதை வேட்கையால், மயில் போலும் சாயலை உடைய
 பெண்ணையும் குறித்தனர். இதுவே இயைபு காரணமாகத் தோன்றிய
 பொருளாகும்.
 
 
 3.5.2 சொற்பொருள் எதிர்நிலை 
	
	 
     மேற்கூறியபடி சொற்கள் பொருள்கொள்கின்ற முறைகளைக்
 காணும்போது, இவை எவ்வாறு வந்தன என்பது பெரிதும் 
 
 ஆய்வுக்கு உரிய ஒன்று.
 
     ஒரு சொல், தான் குறிக்கும் பொருளுக்கு எதிரானதொரு
 வேறொரு பொருளையும் குறிக்கும் முறை தமிழ்மொழியில்
 காணப்படுகின்றது. இது எங்ஙனம் என்பதை அறிய, அச்சொல்
 பல்வேறு இலக்கியங்களுள் எவ்வாறெல்லாம் மாற்றமடைந்து
 வந்துள்ளது என்பதையும் ஆய்தல் வேண்டும். 
 
 
 எ.கா: 
		
 
 
 
 
 
  
 | நக்கல்  | 
   | 
 தீண்டுதல்  
  
 சிரித்தல்   | 
   | 
 நேர்ப்பொருள்  | 
  
  
   
 
  
 | நக்கல்  | 
   | 
 கெடுத்தல்  
  
 சுடுதல்   | 
   | 
  எதிர்ப்பொருள்  | 
  
  
 
  
 சிரித்தல் என்ற பொருளுடைய அச்சொல்லே எவ்வாறு கெடுத்தல்
 என்ற பொருளையும் தரும்? அப்பொருளையும் ஏற்றுக்கொண்டால்
 அச்சொல்லினது     பொருள் எங்ஙனம் விரிந்து விரிந்து 
 
 திரிபடைந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
	
	 
 நக்கல் < நக்கு < நகு
 
 என நக்கல் எனும் 
 சொல் நக்கு, நகு என்னும் முந்தைய
 உருவங்களை உடையதாக விளங்குகிறது.  
 
  
 | நக்கல் 
  | 
   | 
 நக்கு 
  
 நண்ணு 
  
 
 நத்து 
  
 நச்சு  | 
  
  
 மேலும் நகு, நண்ணு, நத்து, நச்சு என்ற இந்நான்கு சொற்களையும்
 நக்கு என்னும் சொல்லிற்கு இனமானவையாகக் கொள்ளலாம்.
 நண்ணுதல் என்னும் பொருளை உடையதாய் நக்கு என்னும் சொல்
 தீண்டுதல் என்னும் பொருளையும் உணர்த்துகிறது. பிறகு
 அச்சொற்பொருள் விரிந்து, பரந்து அகற்றிவிடல், 
 கெடுத்தல்
 என்னும் பொருட்களிலும் வழங்கி வருகிறது.
	
	 
     இவ்வாறே நக்கலோடு ஒத்த இணைச்சொல்லான 
 நத்துதல்
 (நந்துதல்) என்னும் சொல்லும்  வளர்தல்,
  கெடுதல் என்னும்
 எதிரெதிரான பொருட்களைக் கொண்டதாக விளங்குவதையும் 
 ஆராய வேண்டும். 
 
 3.5.3 சொற்பொருள் வழக்காறிழத்தல் 
	
	 
     காலப்போக்கில் சொற்கள், இவ்வாறு நேர் எதிரான
 பொருட்களை உடையனவாக மாறுவது போல், தம் பொருள்
 வழக்கினை இழந்து, இழிந்த வழக்கினவாக மாற்றமடைதலையும்
 காணமுடிகின்றது.
 
     எ.கா : ஆண்டவன்
 
 இச்சொல் அகலுதல், 
  அகழ்தல் 
 என்னும் அடிச்சொற்களுக்கு
 இனமாகிய ஆள் என்னும் வழியடியாகப் 
 பிறந்து, ஆண்டை என
 மாறி, எசமான் என்ற 
 பொருளைக் குறித்தது. பின்பு ஆண்டை
 என்பது ஆண்டி 
 என மருவி நின்றது. ஆண்டவன் என்ற சொல்
 ஆண்டி என்ற வடிவத்தைக் கொள்ளும்போது 
 வெவ்வேறு
 பொருட்களைக் குறிக்கின்றது.  
 
  
 | ஆண்டி | 
   | 
 பிச்சை எடுத்துண்ணும் 
 ஒரு வகைச் 
 சைவர்  
  உலக வழக்கில் 
 யாருமற்ற பரதேசி   | 
  
  
 ஆண்டவன் என்ற பெயர்ச்சொல் பரதேசி என்ற பொருளில் வந்தமையால் அவ்வுயர் வழக்காறு, இழிவழக்காறாக மாறியது. 
  |