தமிழ் மொழியில் அடிச்சொற்கள் பற்றிய ஆய்வு மிகப்
பழங்காலத்திலேயே சொல் இலக்கணத்தின் ஒரு பகுதியாக
அமைந்துவந்துள்ளது. இது குறித்து, தொல்காப்பியம், நன்னூல்
போன்ற பழைய இலக்கண நூல்கள் பற்பல கருத்துகளை
ஆங்காங்கே சுட்டிக்காட்டியுள்ளன. இலக்கண ஆசிரியர்கள்,
சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள இயைபு குறித்து பெயரியல்,
உரியியல் போன்ற இயல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு
சொல் குறித்த பல பொருள்களையும், ஒருபொருள் குறித்த பல
சொற்களையும் தம் இலக்கண நூல்களில் விளக்கி உள்ளனர்.
இவற்றை எல்லாம் தெளிவாக அறிந்துகொண்டால் தமிழின்
சொற்பொருள் வளத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.
|