4.4 ஒருபொருள் பலசொல் வகைகள்

    இனி, ஒரு பொருளைக் குறிக்கும் பலசொற்களைப் பின்வரும் வகைப்பாட்டில் காண்போம்:

1. ஒலியமைப்பில் வேறுபட்ட இரண்டு சொற்கள் ஒரே பொருளை உணர்த்தலாம்.

    சந்தோஷம், மகிழ்ச்சி
     பதில், விடை
    கல்யாணம், திருமணம்

2. ஒலியமைப்பில் மிக நெருக்கமான இரண்டு சொற்கள் ஒரே பொருளை உணர்த்தலாம்.

     சாதி, ஜாதி
     பழம், பளம்

3. வேற்றுமொழிச்     சொற்கள் உட்புகும்     போது, ஒருபொருளைக் குறிக்கும் பலசொற்கள் உருவாகின்றன.

    (அ) முற்றிலும் ஒத்த பொருளைக் குறிக்கும் சொற்கள்
     சாலை, ரோடு - road

    (ஆ) சற்று வேறுபட்ட (ஆனால் நெருக்கமான) பொருளைக் குறிக்கும் சொற்கள்
         டாக்டர், மருத்துவர் - Doctor

    (இ) சிறிது வேறுபட்ட பொருளைக் குறிக்கும் பல சொற்கள்
         மேஜிக், வித்தை - magic, witchcraft
         ஃபீஸ், கட்டணம் - fees, fare.

    (ஈ) தாய்மொழியில் சொல் இருந்தும் மதிப்பு, உயர்வுநிலை கருதிப் புகுத்தப்படும் (பிறமொழிச்) சொற்கள்
         அரங்கு, ஆடிட்டோரியம் - Auditorium

    (உ) வேற்றுமொழிச் சொற்கள் உட்புகுந்த பின், அவற்றுக்கு இணையாகத் தாய்மொழியில் உருவாக்கப்படும் சொற்கள்:
     டெலிவிஷன், தொலைக்காட்சி - television.
         ஃபேக்ஸ், தொலை மடல் - fax
     டெலிபோன், தொலைபேசி - telephone
     ஆடிட்டோரியம், கலையரங்கு - Auditorium

    (ஊ) தாய்மொழியில் இணையான சொற்கள் உருவாக்கப்பட்ட பின்னும், வேற்றுமொழிச் சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படலாம்.
     சைக்கிள், ஈருருளி, மிதிவண்டி, துவிச்சக்கர வண்டி
                 (bicycle)
    டீ, தேநீர், சுவைநீர் - tea

    இதற்கு, பழக்கவழக்கங்கள், பிறர் உருவாக்கிய சொற்களை ஏற்க மனமின்மை, சொற்கள் பொதுவானவையாக இல்லாமை, சொற்களின் கடினத்தன்மை என்பவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.

(எ) தவிர,     இணையான     தாய்மொழிச்     சொற்கள்
     பயன்படுத்தப்படுவதால்,     பிறமொழிச்     சொற்கள்
     காலப்போக்கில் மறைய வாய்ப்புண்டு

     ஆங்கிலத்தின் Director தமிழில் `டைரக்டர்’ என
     வழங்கப்பட்டுவந்தது. இப்போது `இயக்குநர்’ என்பது
     பயன்படுத்தப்படுவதால்     நாளடைவில்     `டைரக்டர்’
     மறையலாம். அதே போல் ஆங்கில Cinematographer-ஐத்
     தமிழில்     கேமராமேன் என்று சொல்லிவந்தோம்.
     `ஒளிப்பதிவாளர்’ என்பது வழக்கத்துக்கு வந்தபிறகு
     ஆங்கிலச் சொல் மறைந்து விடும்.

(ஏ) வேற்றுமொழிச் சொற்களை ஒருமொழி கொள்வதால்,
     ஒருபொருளைக் குறிக்க அம்மொழியில் 2 அல்லது 3
     சொற்கள் இருக்கும் நிலை நிலவக் கூடும்.

        நீதிமன்றம், கோர்ட்டு - Court
        மிச்சம், பாக்கி, பேலன்ஸ் - balance
        தொழிற்சாலை, பேக்டரி - factory

(4) நிலைபெறும் சூழல், பொருள் பரப்பு, அமைப்பு
ஆகியவற்றின் அடிப்படையில், தாய்மொழியிலான ஒரு
பொருளைக் குறிக்கும் சொற்களை முறையே
பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

    (அ) மிக ஒத்த பொருளைக் காட்டும் சொற்கள்

         அண்ணி, மதனி
         புத்தகம், நூல்

     சிறிது வேறுபட்ட பொருளைக் காட்டும் சொற்கள்:

        கஷ்டம், நெருக்கடி
        ஆத்திரம், ஆவேசம்

     (ஆ) பொதுச்சொற்கள் - குறிப்புச் சொற்கள்

         அடி, தாக்கு, உதை
        இக்கட்டு, நெருக்கடி, முடை

(5) கிளைமொழிகளில்     ஒருபொருளைக்     குறிக்கும்
பலசொற்கள் உருவாகலாம்.

    வட்டாரக் கிளைமொழி: கன்னியாகுமரி : தொந்தரவு, பசு,
     புலம்பு வடார்க்காடு : சிரமம், கறவை, பெனாத்து

சமுதாயக் கிளைமொழி :

    (i)    சாதிச் சொற்கள்
        சீனி : ஜீனி
        அத்தை : மாமி
        பெண்டாட்டி : ஆம்படையாள்

     (ii)    மதச் சொற்கள் - கோயில் - ஆலயம் -
     பள்ளிவாசல் / கடவுள் - தேவன் - அல்லா /
     கும்பிடு - பிராத்தி (பிரார்த்தி) - தொளுவு
     (தொழு).

(6) ஒரு பொருளைக் குறிக்கும் சொற்களின் நடை பின்வருவன - வற்றிற்கேற்ப மாறுபடும்

    பேசுவோரைப் பொறுத்து : வணக்கம் - நமஸ்காரம்
             வரட்டுமா - வர்றேன்
     பேச்சுமொழி - எழுத்துமொழி : கை - கரம்
                பூ - மலர்
            பண்டாட்டி - மனைவி
    காலத்தைப் பொறுத்து : அக்காலம் → ஞிமிறு, நிணம்
             இக்காலம் → தேனீ, சதை
     தோன்றும் துறையைப் (சூழல்) பொறுத்து:
               மருத்துவர் - மலம் : பேதி
               சடங்கு - சடங்கு : புனித நீராட்டு
               முதலிரவு - சாந்தி முகூர்த்தம்
               மதம் - படு : பள்ளிகொள் (சயனி)
               மனது : இருதயம்

     பேசுவோர் நிலையைப் பொறுத்து : வா; வாரும்;
                     வாங்கோ
     சூழலைப் பொறுத்து : பேச்சுச்சூழல் : நூல் /
                         பத்திரிகைச் சூழல்
               எத்தினி - எத்தனை
               அம்மாசி - அமாவாசை
     சாதாரண பேச்சுச்சூழல் : சாப்பிடு
     தரமற்ற பேச்சு வழக்கில் : கொட்டிக்கோ.

(7) ஒரு பொருளைக் குறிக்கும் சொற்களில் ஒன்று தனிச்சொல்லாக இருக்கலாம். பிறசொற்கள் இரட்டிப்புச் சொற்களாக, பொருளிரட்டிப்புச் சொற்களாக, எதிரொலிச் சொற்களாக (Echo words) இருக்கலாம்.

வ.எண் தனிச்சொல் இரட்டிப்பு
1.
2.
3.
கபடி
சதங்கை
சந்தோஷம்
சடுகுடு
கிண்கிணி
கிளுகிளுப்பு
  தனிச்சொல் பொருள் இரட்டிப்பு
4.
5.
ஆஸ்தி
அசௌக்கியம்
பொன்னு பொருளு
நோய் நொடி
  தனிச்சொல் எதிரொலி
6. பூச்சி பாம்புகீம்பு, பல்லிகில்லி.