|
4.5
தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை ஒருசொல் பலபொருள் குறித்தும்,
ஒருபொருள் பலசொல் குறித்தும் பல செய்திகளை
அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன
செய்திகளை அறிந்துகொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை
நினைவுபடுத்திப் பார்க்கலாம்.
- ஒருசொல் ஒருபொருள், ஒருசொல் பலபொருள், ஒருபொருட்
பலசொல் குறித்துப் பழமையான இலக்கண நூல்களான
தொல்காப்பியமும், நன்னூலும்
கூறும் செய்திகளை
அறிந்து கொண்டீர்கள்.
- ஒரு பொருளுக்குப் பல சொற்கள் உருவாகக் கூடிய
பல்வேறு காரணங்களையும் , அதற்குரிய சான்றுகளுடன்
புரிந்துகொண்டீர்கள்.
- ஒருபொருளைக் குறிக்கும் பலசொற்கள் இருப்பினும்,
அவற்றிடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும், வகைகள்
குறித்தும் தக்க சான்றுகளுடன் உணர்ந்து கொண்டீர்கள்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
ஒரே பொருளைக் குறிக்கும் இருசொற்களிடையே
உள்ள நுண்ணிய வேறுபாட்டிற்குச் சான்று தருக.
|
|
2. |
பிறமொழியிலிருந்து தமிழ்மொழிக்கு வந்து ஒரே
பொருளைத் தரும் சொற்களுக்குச் சான்றுகள் தருக.
|
|
3. |
சாதிக்கிளைமொழி ஒருபொருள் பலமொழிக்கு
உதாரணமாவதற்குச் சான்று தருக. |
|
4. |
தமிழில் வழங்கும் எதிரொலிச் சொற்களுக்குச்
சான்றுகள் தருக.
|
|
|