5.3 உல்மனின் சொற்பொருள் மாற்ற வகைகள் சொற்பொருள் மாற்றங்களை நான்குவகை மாற்றங்களாகப் பின்வருமாறு வகைப்படுத்துகிறார் உல்மன். 1. உருவகமாக்கல் மாற்றம் (Metaphor) பொருள் ஒற்றுமை அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது. எ.கா: தழுவல் : ( தழுவுதல், தழுவல் இலக்கியம் ) தண்ணி : ( தண்ணீர், மது ) 2. ஆகுபெயராக்கல் மாற்றம் (Metonymy) இம்மாற்றம் பொருள் தொடர்ச்சி அடிப்படையில் அமைகிறது. எ.கா: கண் : கண்ணேறு (இலக்கியம்), கண் வைத்தல் எழுத்து : எழுத்து, கடிதம் (Letter, post) கண்காணி : கண்காணித்தல், தொழிலாளர்களைக் கண்காணிப்பவன் (watch, watchman) 3. தேர்ந்தெடுத்த விளக்கத்தாலான மாற்றம் (popular etymology) இம்மாற்றம் அமைப்பு ஒற்றுமை அடிப்படையில் அமைவது. எ.கா : பாம்புராணி : அரணை, பாம்பின் ராணி இங்கிலாண்டு : இங்கிலாந்து, இன்லேன்ட் கடிதம் 4. பெயர்க் குறுக்கத்தாலான
மாற்றம் (Ellipsis) எ.கா: அறுவடையின் போது வந்தான். அறுவடை (காலம்) ; அறிஞர் (அண்ணா) (அண்ணா- மேன்மை உடையவர்) |