இந்தப் பாடம் சொற்பொருள் மாற்றத்திற்கான பல்வேறு
காரணங்களை விரிவாகக் கூறுகிறது. தமிழ்மொழியில்
சொற்பொருள் மாற்ற வகைகளையும், சொற்பொருள்
மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளையும் விரிவாகப்
புலப்படுத்துகிறது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படிப்பதன் மூலம் நீங்கள் பின்வரும்
கருத்துகளையெல்லாம் நன்கு அறிந்து கொள்வீர்கள்:
சொற்பொருள் மாற்றமடைவதற்கான பற்பல காரணங்கள்.
சொற்பொருளியல் குறித்து விரிவாக ஆய்வு புரிந்த
உல்மன் அவர்கள் குறிப்பிடும் சொற்பொருள் மாற்ற
வகைகள்.
தமிழ்மொழியில் பலவகையான சொற்பொருள் மாற்றங்கள்
மற்றும், அம் மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்.