|
தமிழ்மொழியின் வரலாற்றை அறிவதற்கு, அடிப்படையில்
பெருந் துணை புரிவன பழமையான இலக்கணங்களும்,
இலக்கியங்களும் ஆகும். இன்று நம் தமிழ்மொழியில் காணப்படும்
பழமையான இலக்கண நூல்,
தொல்காப்பியமே ஆகும்.
தொல்காப்பியத் தமிழின் மொழி இயல்பையும், சங்க இலக்கிய
மொழி அமைப்பையும் நுணுகி ஆயும்போது, தொல்காப்பியமே
சங்க இலக்கியத்துக்கு முற்பட்ட நூலாக விளங்குவதை
அறியமுடிகின்றது. இதனையடுத்த காலகட்டத்தில், சங்க
இலக்கியங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியுள்ளன.
இவ்விலக்கியங்கள் தொகுப்பாரும், தொகுப்பித்தாரும் மேற்கொண்ட
முயற்சியால் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையுமாக, உருவாயின.
இப்பேரிலக்கியத்தைத் தொடர்ந்து, திருக்குறள் என்னும் அறநூல்
தோன்றி, தாய்மொழியின் வளர்ச்சியை அறியப் பேருதவி புரிகின்றது.
திருக்குறள் உள்ளிட்ட சங்கம், சங்கம் மருவிய காலத்து அற
இலக்கியங்களையும் அக, புற இலக்கியங்களையும்
பதினெண்
கீழ்க்கணக்கு எனத் தொகுத்தனர்.
அடுத்தடுத்த காலகட்டங்களில் தோன்றியனவாக இருப்பினும்
தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகிய இம்
மூன்றினிடையேயும் சொற்பொருள் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன
என்பதைக் கீழ்வரும் பல்வேறு சான்றுகளின் வாயிலாக
அறிந்துகொள்ளலாம்:
பொருள்
வ. எண் |
சொல்
|
தொல்காப்பியம்
|
சங்க இலக்கியம் |
திருக்குறள் |
1. |
அரு |
அட்டை |
- |
பெறுதற்கரிய
உபதேசப்
பொருள் |
2. |
தகர்
|
விலங்குகளின்
ஆண்பாற் பெயர் |
ஆட்டுக்கிடாய்,
மேட்டு நிலம்,
வருடைமான்
கிடாய்
|
செம்மறிக்
கடா
|
3. |
மை |
மேகம் |
அஞ்சனம்,
கருநிறம்,
கருமை,
அழுக்கு,
இருள், ஆடு,
எருமை,
குற்றம், மறு,
மாசு, மேகம்,
கருமேகம்,
களங்கம், பசுமை
பிறவி |
-
|
4. |
கடமை |
மான்வகை, சில
விலங்குகளின்
பெண் பெயர் |
ஒரு விலங்கு |
-
|
5. |
நூல் |
யாப்பு வகைகளுள்
ஒன்று, பனுவல்,
புத்தகம், இலக்கணம்
|
பஞ்சு நூல்,
வாய்க் கயிறு |
சுவடி,
இலக்கியம்,
நூற்பொருள்
|
6. |
சேவல் |
ஆண் குதிரை,
ஆண் பறவை,
விலங்கு, பறவைகளின்
ஆண் பெயர் |
ஆண்
அன்னம்,
ஆண்பறவை,
கருடன்
|
-
|
7. |
ஆண்
|
மரவகை |
வீரன் |
-
|
8. |
எரி
|
நெருப்பு
|
கார்த்திகை,
நட்சத்திர
வகை, தீ,
வெம்மை |
நெருப்பு
|
9. |
ஏறு
|
விலங்கின் ஆண் |
இடபம், அடிக்கை, பருந்தின் கவர்ச்சி, எருமைக் கடா,
இடி,
அழிக்கை,
ஆனேறு, இடி
ஏறு, எறிதல்,
ஆண்
விலங்கு,
அழித்தல்,
ஆண்மான்,
சுறா ஏறு |
ஆண்சிங்கம் |
10. |
கடு |
நஞ்சு |
கடுக்காய்,
கடுமரம், நஞ்சு |
-
|
11. |
கயந்தலை |
குழந்தை
|
மெல்லிய தலை,
மென்மையை
உடைய தலை,
யானைக்கன்று |
-
|
12. |
கரகம்
|
சிறிய
கைச்செம்பு |
குண்டிகை,
கமண்டலம்,
சிரகம்
|
-
|
13. |
அடிசில் |
உணவு |
சோறு |
- |
14. |
அணி
|
அணிகலன், நகை |
அழகு,
அலங்காரம்,
அணிகலன்,
ஒப்பனை,கோலம்.
திரட்சி |
அணிகலன்,
நகை, அழகு,
குளிர்ந்த
அணி
|
15. |
அணை |
பஞ்சணை, மெத்தை |
மெத்தை,
படுக்கை |
-
|
16. |
நெல்
|
தானியம், நெற்பயிர் |
தானிய வகை,
மூங்கிலின்
நெல்
|
-
|
17. |
அந்தணன்
|
பார்ப்பனன் |
இறைவன், சிவபிரான்,
வியாழன் |
கடவுள்
|
18. |
நோய்
|
துன்பம், வருத்தம்,
வேதனை |
அச்சம், பசியும்
பிணியும், வியாதி,
காம நோய்,
வருத்தம் |
துன்பம்,
இன்னாதன,
குற்றம்,
உடற்பிணி,
காமப்பிணி,
வினைப் பயன்கள். |
19. |
அமரர்
|
கடவுளர் |
தேவர்
|
- |
20. |
அமிழ்தம்
|
தேவர் உணவு,
அமுதம் |
அமுதம்,
தேவர்களின்
உணவு, வாயில்
ஊறும் இனிய நீர் |
சாவா
மருந்து, அமிழ்த்துவது,
தேவாமிர்தம்
|
21. |
அழல் |
நெருப்பு, தீ, அக்கினி |
அழுதல்,
தீக்கொழுந்து,
காமத்தீ,
நெருப்பு,
விளக்கு,
வெம்மை, தழல்,
செவ்வாய் |
தணல் |
22. |
அளகு |
கோழி,
கூகை
ஆகிய
இரண்டு பறவையினத்திற்கும்
உரிய பெண்மைப்
பெயர் |
கோழிப்பெடை |
-
|
23. |
இரலை |
மான்வகை,
வெண்மையான
முதுகையும்
பிளவுபட்டு
முறுக்குண்ட கரிய
கொம்புகளையும்
உடைய
விலங்கு, புல்வாய்,
கலை |
கலைமான் |
- |
24. |
பகல்
|
பகற்பொழுது
|
இளவெயில்,
ஊழிக்காலம்,
பகற் காலத்தின்
ஒளி, பகற்காலம்,
காலை முதல்
மாலை வரையுள்ள
காலம், சூரியன்,
நடுவுநிலைமை,
நுகத்துப் பகலாணி,
படுத்தல், ஒரு
முகூர்த்தம் |
கூடாமை,
பகலது, பகற்பொழுது |
25. |
எரு |
உரம் |
உலர்ந்த சாணம் |
குப்பை,
உரம் |
26. |
ஏடு |
பனை ஓலை
|
பூவிதழ்,
மேன்மை |
- |
27. |
ஐயர்
|
முனிவர்
|
இருபிறப்பாளர்,
தமையன்மார் |
-
|
28. |
பகடு |
எருது (காளைமாடு) |
எருது, எருமைக்
கடா, ஏர், பரப்பு,
பெருமை, வலிமை |
எருது |
29. |
புல்வாய் |
கலைமான்
|
மான் |
- |
30. |
நாழி
|
நாழி என்னும் ஒரு
அளவுப்பெயர் |
ஒருவகை
முகத்தலளவை |
-
|
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I
|
1.
|
‘அறம்’ என்ற சொல் எத்தகைய மாற்றம்
அடைந்துள்ளது? |
|
2.
|
புறநானூற்றில் இடம்பெறும் ‘கோயில்’ என்ற சொல்
தற்காலத்தில் எத்தகைய பொருளில் வழங்குகிறது? |
|
3.
|
‘எரு’, ‘ஏடு’ - இவ்விரு சொற்களும் உணர்த்தும்
பொருட்கள் யாவை?
|
|
4.
|
‘சேவல்’ என்ற சொல் உணர்த்தும் பொருள்
அடைந்த சுருக்கத்தைப் புலப்படுத்துக.
|
|
|