பாடம் - 6

D04136 காலப்போக்கில் சொற்பொருள் மாற்றம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் காலப்போக்கில் எவ்வாறு சொல்லுக்குரிய பொருள் பல்வேறு வகைகளாக மாறி வந்துள்ளது என்பதை விளக்குகிறது. பழங்காலத்திலிருந்து, ஒவ்வொரு காலகட்டமாக ஏற்பட்ட பொருள்மாற்றத்தைத் தக்க     சான்றுகளுடன் விவரிப்பதாக இப்பாடம் அமைந்துள்ளது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும்போது, நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும், பயன்களையும் பெறுவீர்கள்.

  • தமிழ்மொழி வரலாற்றில் ஏற்பட்ட சொற்பொருள் மாற்றங்களை நன்கு உணர்ந்துகொள்ளலாம்.
  • பழங்காலத்தில் ஏற்பட்ட சொற்பொருள் மாற்றத்தைத் தொல்காப்பியம், சங்க     இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றின் மூலம் அறிந்துகொள்ள இயலும்.
  • பழமையான இலக்கியச் சொற்பொருள் வழக்கு, 17-ஆம் நூற்றாண்டிலும் நிலைபெற்றுள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.
  • தொல்காப்பியம் முதல் தற்காலம் வரை சொற்பொருள் மாறிய விதங்களை அறிந்துகொள்ளலாம்.

பாட அமைப்பு