|   | 
  1.7 தொகுப்புரை 
 
      இதுவரை இப்பாடத்தில்  பேச்சு ஒலி (speech sound)
 உயிர் ஒலி 
 என்றும்  மெய்ஒலி  என்றும் பிரிக்கப்படுவது பற்றி
 அறிந்து கொண்டீர்கள். பழந்தமிழ் இலக்கண ஆசிரியர்களும்
 தற்கால மொழியியலாரும் ஒலிகளின் பிறப்பு முறை பற்றிக்
 கூறுவதில் எவ்வாறு ஒத்துப் போகின்றனர் என்பது பற்றிப்
 படித்தீர்கள். தடையில்லாமல் வாயினுள் நாவின் முயற்சியால் 
 
 உயிர் ஒலிகள் பிறக்கின்றன என்ற கருத்தினை அறிந்து
 கொண்டீர்கள். தமிழில் 
 உள்ள நெடில் உயிர் ஒலிகள் ஐந்தனையும்
  /:/ என்ற ஒரே குறியீடாகக் கொண்டு உணர்த்தி, அதனை
 மொழியியலார் ‘superasegmental sound’ என்று விளக்குவதைப்
 படித்துணர்ந்தீர்கள். உயிர் ஒலிகள் நாவின் முயற்சியாலும்,
 இதழ்களின் முயற்சியாலும் ஒலிக்கப்படுவதை வரைபடங்களைக்
 கொண்டும், அட்டவணை கொண்டும் நன்கு விளங்கிக்
 கொண்டீர்கள்.
  
 
 
 
  
 | 
  தன் 
 மதிப்பீடு : வினாக்கள் - II  | 
  
  
 |  
  1. 
  | 
 
 முன் அண்ண உயிர் ஒலிகள் யாவை? | 
  
 
  | 
  
  
 |  
  2. 
  | 
  தொல்காப்பியர் பிறப்புமுறை கூறும்போது இகரத்துடன் இணைத்துக் கூறும் உயிர் ஒலி யாது?
 | 
  
 
  | 
  
  
 |  
  3. 
  | 
   தாழ் நடு உயிர் ஒலிகள் யாவை? | 
  
 
  | 
  
  
 |  
  4. 
  | 
 
 இதழ் குவியா முயற்சியால் பிறக்கும் உயிர் ஒலிகள் யாவை?
 | 
  
 
  | 
  
  
 |  
 5. | 
  இதழ் குவி முயற்சியால் பிறக்கும் உயிர் ஒலிகளைக் குறிப்பிடுக.
 | 
  
 விடை | 
  
 
 
 
 
 
   
   |