பாடம் - 3

D05133 கருவி இசை

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தமிழகத்தின் தனிப்பெரும் இசையான மங்கல இசையின் சிறப்புப் பற்றி உரைக்கிறது.

    மங்கல இசைக் குழுவில் உள்ள நாகசுரம் என்ற இசைக்கருவியின் அமைப்பு, வகைகள், பயிற்சிமுறை பற்றியும், தவில் கருவியின் அமைப்பு, பெயர்க்காரணம், இலக்கியம், கல்வெட்டு உரைக்கும் செய்தி பற்றியும் கூறுகிறது.

    ஆலய வழிபாட்டில் முக்கியப் பங்காற்றி வரும் இவ்விசை பற்றியும், இவ்விசையைப் போற்றிய மங்கல இசை மன்னர்கள் பற்றியும், புகழ்சால் கலைஞர்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • இந்தப் பாடத்தைப் படிப்பதால் தமிழகத்தின் தனிப்பெரும் இசையான மங்கல இசை பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • மங்கலம், மேளம், நாகசுரம், தவில் போன்ற வழக்காறுகளின் தன்மைகள் பற்றி உணர்ந்து கொள்ளலாம்.
  • சமுதாய விழாக்களிலும், ஆலய வழிபாட்டிலும் இடம்பெற்று வரும் இவ்விசையை நேரில் கேட்டு அனுபவித்து மகிழலாம். இவற்றின் நுட்பங்களை அறிந்து சுவைக்கலாம். பயில விரும்புவோர் இவற்றின் நுட்பங்களை அறிந்து போற்றலாம்.
  • இவ் இசையை வளர்த்த புகழ்சால் கலைஞர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். உலக இசை விற்பன்னரால் இவர்கள் போற்றப்பட்ட சிறப்பையும், தமிழகத்திலும் இந்தியத் திருநாட்டிலும் இவர்கள் ஆற்றிய தொண்டுகளையும் அறிந்து பெருமைப் படலாம்.

பாட அமைப்பு