4.7 தொகுப்புரை

    பரத நாட்டியம் என்ற பெயரில் உலகப் புகழ் ஈட்டி வரும் ஆடற்கலை, தமிழ் மண்ணில் உருவாகியது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் வளப்படுத்தப்பட்ட மரபுக்கலை இது. கால ஓட்டத்தில் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.

தற்போது பாவம், ராகம், தாளம், ஆகிய மூன்றும் இணைந்த ஆடற்கலை என்று பொருள்படும் "பரத நாட்டியம்" என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

இந்நாட்டியக் கலைக்கென்ேற ஆடல் முறைகள், அபிநய வகைகள் உள்ளன. நாட்டியத்தை மேடைக்குரிய ஒரு கலைவடிவமாகக் கொண்டு வந்தவர்கள் தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வர் ஆவர். இவர்கள் காட்டிய வழியில் பரத நாட்டிய நிகழ்ச்சி நிரல் உருவாகியது. இந்த நிகழ்ச்சி ஒழுங்கு முறை இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

பரதநாட்டியக் கலை ஒரு ஒருங்கிணைந்த கலை; பக்க இசை யாளர்க்கு இதில் பெரும்பங்கு உண்டு.

உலகின் பல்வேறு கலைவடி வங்களின் தாக்கங்கள் இடம்பெறும் காலம் இது. இத்தகையதொரு சூழ்நிலையில் பரதக்கலை மரபு பரம்பரைக் கலைஞர்களால் தொடர்ந்து காக்கப்படுகிறது. பரத நாட்டியக் கலை ஆர்வலரின் ஈடுபாடு போற்றத்தக்கது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. கொடு கொட்டி என்னும் ஆடல் எந்தத் தெய்வத்திற்குரியது?

விடை

2. ஆகார்ய அபிநயம் என்றால் என்ன?

விடை

3. பிண்டி என்றால் என்ன?

விடை

4. சுவை உணர்வுகள் எத்தனை?

விடை

5. ஜதிசுரம் என்ற உருப்படியில் பாடல் இருக்குமா?

விடை

6. தலைவன் தலைவி உறவைச் சித்தரிக்கும் உருப்படியின் பெயர் என்ன?

விடை

7. நட்டுவாங்கம் செய்பவர் யார்?

விடை

8. ருக்மணி அருண்டேல் நிறுவிய கலை நிறுவனத்தின் பெயர் என்ன?

விடை

இசையும் - நாட்டியமும

Video Gallery