4.0 பாட முன்னுரை
“இலக்கியமும் வாழ்க்கையும்” என்ற பாடத்தில்
திறனாய்வுக்குத் தளமாக இருப்பது இலக்கியம் எனவும், அந்த
இலக்கியத்தின் பாடுபொருளாக அல்லது உள்ளடக்கமாக
இருப்பது வாழ்க்கை எனவும் கண்டோம். அவ்வாறு
வாழ்க்கையைச் சித்தரிக்கும் போது, அது, எதன் மூலமாக
அல்லது எதன் ஊடாகச் சித்தரிக்கின்றது? எதுவும் மொழியின்
வழியாகத் தான், சொல்லப் படுகிறது.
இலக்கியத்திலுள்ள மொழியை - இலக்கியமாகியிருக்கின்ற
மொழியைத் - திறனாய்வு மிக்க கவனத்துடன் மதிப்பிடுகின்றது.
எப்படி? இனி, பார்ப்போம்.
|