தன்மதிப்பீடு : விடைகள் - I

5.

‘மாண்ட’ என்ற சொல், வழங்குகிற விதத்தைக் கூறுக.

‘மாண்ட’ என்ற சொல், பழந்தமிழில் மாட்சிமைப்பட்ட அல்லது ‘நல்ல’ என்ற பொருளையுடையது. மாண் என்பது அடிச்சொல். ‘மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்’ என்பது உதாரணம். அடுத்து மாண்ட என்பது, பிற்காலத்துத் தமிழில் ‘இறந்து போன’ என்ற பொருள் தருகிறது. ‘மாள்’ என்பது இதன் அடிச்சொல்.

முன்