3.0 பாட முன்னுரை

இலக்கியம், ஒரு கலையாக, ஒரு சாதனமாக, ஒரு சக்தியாக வருணிக்கப்படுகிறது. அது    நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவற்றைப் பொதிந்து வைத்தும் பேசுகிறது. இலக்கியத்தின் அத்தன்மைகளையும், அதனுடைய சாத்தியங்களையும் வழிகளையும் ஆராய்வது திறனாய்வு. இத்தகைய திறனாய்வை மேற்கொள்ளப் பின்பற்றப்படும் வழிமுறையே அணுகுமுறை எனப்படும். இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.