3.4 அழகியல் திறனாய்வில் முன்னோடிகள் | ||||
அழகியல் திறனாய்வின் முன்னோடிகள் பலர். அவர்களைப் பற்றி இனிப் பார்ப்போம். |
||||
|
||||
தமிழ் இலக்கியத்தில் இத்தகைய ரசனை பற்றிப் பேசுபவர்கள்
ரசிகமணி டி.கே.சி மற்றும் அவர்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களுள் கல்கி, ராஜாஜி, பேராசிரியர் அ.சீனிவாசராகவன்,
பேராசிரியர் ஆ.முத்துசிவன், பி.ஸ்ரீ., நீதிபதி எஸ்.மகாராஜன்,
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், வித்துவான்
ல.சண்முகசுந்தரம் முதலியவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள்
ரசிகமணியின் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களன்றியும், இவர்களுக்குப் பின்னால், பலர் இந்த
அணுகுமுறையைப் பின்பற்றினார்கள். |
||||
|
|
|||
|
||||
மேலைநாட்டுத் திறனாய்வின் அறிமுகத்துடன் தமிழ்ச்சூழலை
அணுகியவர் வ.வே.சு.அய்யர். இவரது பார்வை, அழகியலுக்கு
உட்பட்டது. அவர் முதலில் சுவை அல்லது பேருணர்ச்சி என்ற
அளவுகோலினை வரையறுத்துக் கொண்டார். ரசனை பற்றிய அவர்
கருத்து என்னவெனில் “கதையின் ஓட்டத்தையும், கம்பரசனைகளின்
அமைப்பையும் ரசிகன் இருதயத்திற்குள் திருப்தி அளிக்கும்படி
பொருத்தமாகச் சேர்த்து வைத்து எழுதுவதே ரசனையாகும்”
என்பதாகும். |
||||
|
|
|||
|
||||
இலக்கியம் என்பது கொள்கை, கோட்பாடுகளை ஏற்றிச்
செல்லும் வாகனமல்ல. அது உள்ெளாளி உடையது. ஓர்
இலக்கியத்தினிடம் அகவயமான வாசிப்புடன்தான் தொடர்புகொள்ள
முடியுமே தவிர, புறவயமான வாசிப்புகளால் அல்ல என்பது
அழகியல் வாதத்தினர் முன் வைத்த கருத்தாக இருந்தது. இதில்
க.நா.சுப்பிரமணியம் குறிப்பிடத்தக்கவர். அவர் தன்
கவிதைகளைப் பற்றிப் பேசுகிற போது “வாழ்க்கை சிக்கல்
நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதையும் சிக்கலும்
சிடுக்கும் நிரம்பியதாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை.
தெளிவு தொனிக்க வேண்டும ஆனால் சிக்கல் விடுவிக்கக்
கூடியதாகவும் இருக்க வேண்டும். கவிதை நயம் எது என்று
எடுத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும். புரியவில்லை
போல இருக்கவேண்டும். அதே சமயம் பூராவும் புரியாமல்
இருந்துவிடக்கூடாது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து, பின்
உள்ளத்தைப் பிடித்துக் கொள்ளும் குணம் கொண்டதாக இருக்க
வேண்டும்” என்று பேசுகிறார். |
||||
|
|
|||
|
||||
அழகியல் திறனாய்வினை மேலைநாட்டு ஒளியில், ஒரு
கொள்கையாகச் செய்தவர்கள் க.நா.சுப்பிரமணியமும் மற்றும் அவர்
வழி வந்தவர்களும் ஆவர். மனப்பதிவு முறைத் திறனாய்வு
இவர்களின் முறை. டி.கே.சி முதலியவர்கள், அழகியல்
அணுகுமுறைக்கு உரிய தளமாகக் கவிதையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
பின்னால் வந்தவர்கள் நவீனவாதிகள். இவர்கள் உரைநடை இலக்கியத்தைத் தளமாகக்
கொண்டார்கள். சிறுகதையும் நாவலும், இவர்களால் அழகியல் அணுகுமுறைக்குத்
தளங்களாயின |
||||
|
|
|||
|
||||
டி.கே.சி தன்னுடைய ரசனைக்கு அதிகமாக உட்படுத்திய இலக்கியம், கம்பராமாயணமே யாகும். கம்பனை மிகவும் சுவைபட ரசித்துச் சொன்னவர் அவர். தாளம், லயம், சந்தம் என்று கம்பன் கவிதையை அவர் ரசித்துச் சொன்னார். ஆனால் கம்பனுடைய எல்லாப் பாடல்களையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோலக் கம்பனுடைய வைணவத் தத்துவத்தையோ கம்பன் கண்ட சமுதாயத்தையோ இவர் பேசவில்லை. இவரைப் பின்பற்றி எழுதியவர்களும் பெரும்பாலும் கம்பனைப் புகழ்ந்து எழுதினார்கள். முத்துசிவனின் அசோகவனம், பி.ஸ்ரீயின் சித்திர ராமாயணம், ஏ.சி.பால் நாடாரின் கம்பனைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள் முதலியனவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். |
||||
|
|