|
இப்பாடம்
திறனாய்வை மேற்கொள்ள உதவும் அணுகுமுறை பற்றி விளக்குகிறது. அணுகுமுறை
என்றால் என்ன என்பதற்குரிய விளக்கம், அணுகுமுறையின் இன்றியமையாமை,
அணுகுமுறை அமையும் விதம், அணுகுமுறை பொருத்தம், அணுகுமுறையின்
வகைகள் என்பனவற்றைப் பற்றிக் கூறுகிறது.
திறனாய்வு அணுகுமுறைகளில்
ஒன்றான அழகியல் அணுகுமுறையைப் பற்றி இப்பாடம் விரித்துப் பேசுகின்றது.
அழகியலின் வரையறை, அழகியல் அணுகுமுறையின் விவாதம், அழகியலின்
கூறுகள், டி. கே. சிதம்பரநாதனார் அவர்களின் பார்வை, அழகியல்
திறனாய்வு முன்னோடிகள், அழகியலும் மனப்பதிவும் முதலியன பற்றியும்
இப்பாடம் விளக்குகின்றது. |