திறனாய்வின் முக்கியமான மூன்று அணுகுமுறைகளைப்
பற்றி இப்பாடம் பேசுகிறது. அவை, உருவவியல் அணுகுமுறை,
தத்துவவியல் அணுகுமுறை, அறநெறி அணுகுமுறை
என்பனவாகும்.
இலக்கியத்திற்கு உருவம் அவசியமானது; எனவே
உருவவியல் கொள்கை எத்தகையது என்பதை இப்பாடம்
உணர்த்துகின்றது. வரலாற்றோடும் மனிதர்களின் பண்புகள்
மற்றும் சிந்தனைகளோடும் இயற்கைச் சூழலோடும்
தொடர்புடைய தத்துவம் என, இது உணர்த்துகின்றது.
இலக்கியத்தையும் மற்றும் பிறவற்றையும் அறநெறிக்
கண்ணோட்டத்தோடு பார்ப்பது பற்றி விளக்குகிறது. |