D06125 - திறனாய்வு அணுகுமுறைகள் - III
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    வரலாற்றியல் அணுகுமுறை உளவியல் அணுகுமுறை மற்றும் தொல்படிமவியல் அணுகுமுறை ஆகிய மூன்று அணுகுமுறைகளைப் பேசுகிறது.

    இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் உள்ள உறவுகளைப் பற்றி விளக்குகிறது. உளவியல் எவ்வாறு திறனாய்வுக்குத் துணையாய் இருக்கிறது என்பது பற்றிப் பேசுகிறது.

    இலக்கியப் படைப்பில் உள்ள உளவியல் சிக்கல்களை அறிவிக்கின்றது. தொல்படிமவியல் அணுகுமுறையையும், அதன் பண்புகளையும் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • வரலாற்று அணுகுமுறையினைப் பயில்வதன் வாயிலாக இலக்கியத்திற்கும் வரலாற்றுக்கும் உள்ள உறவுகள் புலப்படுகின்றன.

  • உளவியல் பற்றியும் அதன் பல்வேறு தன்மைகள் பற்றியும் அறியலாம்.

  • தொன்மம் என்றால் என்ன என்பது பற்றி அறியலாம்.

  • தொன்மச் செய்திகள் இன்றும் நடைமுறை வழக்கில் வடிவெடுத்திருப்பதை அறிய முடிகிறது.