|
4.8 தொகுப்புரை
தற்காலத் திறனாய்வு என்பது,
இன்றைய இலக்கியம்
தோன்றுகின்ற போது பிறந்தது எனலாம். பழைய இலக்கியங்கள்
பதிப்பிக்கப்பட்டு, இலக்கிய வாசிப்புகள் பெருகவும், நவீனத்துவம்
என்ற சிந்தனை முறை தோன்றவும் ஆன சூழல், திறனாய்வின்
தோற்றத்திற்கு ஏற்புடையதாக
இருந்தது. திருமணம்
செல்வக்கேசவராயர், மறைமலையடிகள்,
வ.வே.சு. ஐயர்
முதலியவர்கள் திறனாய்வின் முன்னோடிகள் ஆவர். தமிழில்
நவீனக் கவிதையைத் தொடங்கி வைத்த மகாகவி பாரதியாரிடமும்,
திறனாய்வுக் கருத்துகள் - திறனாய்வு செய்கிற
முறைகள்
காணப்படுகின்றன. இன்றைய திறனாய்வாளர்களை, முக்கியமாக
மூன்று விதமான பின்புலங்களிலிருந்து வந்தவர்களாகக் கண்டறிய
முடியும். கல்வியியலாளர்கள் மத்தியிலிருந்து
வந்தவர்கள்;
படைப்பாளிகள் மத்தியிலிருந்து வந்தவர்கள்;
மற்றும் இவை
இரண்டுமல்லாத வேறுவேறு பின்புலங்களிலிருந்து வந்தவர்கள்
என்று மூன்று வகைகளில் இவர்களைக்
காணமுடியும்.
கல்வியியலாளர்கள் பொதுவாக, ஆராய்ச்சியில் ஈடுபாடுடையவர்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆராய்ச்சியே
பெருவழக்காக
இருந்தது. தொடர்ந்து, இருபதாம் நூற்றாண்டிலும்
இலக்கிய
ஆராய்ச்சி முக்கிய இடம் வகித்து
வருகிறது; இருப்பினும்,
திறனாய்வு இல்லாமல் ஆராய்ச்சி என்பது இல்லை என்று தான்
சொல்ல வேண்டும். திறனாய்வு, புதிய புதிய வடிவங்களுடன், புதிய
வழித்தடங்களில் வளர்ச்சி பெறத் தொடங்குகிறது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
இன்றைய திறனாய்வாளர்களிடையே
காணும் மூவகையினர் யார்? |
|
2. |
படைப்பாளியாகவும்
அதே போது
திறனாய்வாளராகவும் இருந்தவர்? தொ.மு.சி.
ரகுநாதன் கலாநிதி கைலாசபதி கா.சிவத்தம்பி
ஆகியவருள் எவர்? |
|
3. |
அரசியலில்
முன்னணியில் இருந்தாலும்,
திறனாய்வாளர்களாகவும் இருந்த இரண்டு பேரைக்
குறிப்பிடுக. |
|
4. |
ஜப்பானிய ஹைகூ கவிதை பற்றி
முதன்முதலில் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர்
யார்? எந்த ஆண்டில்? |
|
5. |
புதுமைப்பித்தனும்,
கு.ப.ராவும் எந்தப்
பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தார்கள்? |
|
6. |
புதுமைப்பித்தனும் கு.ப.ராவும்
(வெவ்வேறு
காரணங்களுக்காக) யாரை மறுத்து அல்லது
எதிர்த்து எழுதினார்கள்? |
|
|