இப்பாடப் பகுதி, தமிழ்ச் சிறுகதை
முன்னோடிகளுள் ஒருவரான புதுமைப்பித்தனை அறிமுகம் செய்து,
அவர் எழுதிய சிறுகதைகள், அவற்றின் வழி வெளிப்படும் அவருடைய
சமுதாயப் பார்வை, பாத்திரப் படைப்பு, நடைத்திறன் ஆகியவற்றை
விளக்குகிறது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இப்
பாடத்தினை நீங்கள் கற்பதனால் கீழ்க்கண்ட திறன்களையும்,
பயன்களையும் பெறலாம்.
மிகச்சிறந்த தமிழ்ச் சிறுகதை
முன்னோடியான புதுமைப்பித்தனைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்.
புதுமைப்பித்தன்
சிறுகதைகளின் கதைப் போக்குகளை
உணர்ந்து கொள்ளலாம்.
புதுமைப்பித்தனின்
சமுதாயப் பார்வை எந்த அளவுக்குத்
தீவிரத் தன்மையும் நுட்பமும் கொண்டது என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
புதுமைப்பித்தனின்
நடையில் காணப்படும் எள்ளல்,
சொற்கட்டு, வட்டார வழக்குகள் ஆகியவற்றை அறிந்து
கொள்ளலாம்.
தமிழ்ச் சிறுகதை
மன்னனாகப் புதுமைப்பித்தன் சுட்டப்படுவதற்கான காரணங்களை
விளங்கிக் கொள்ளலாம்.