பாடம் - 1  
P10121  ஆர். சூடாமணியின் சிறுகதைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் ஆர்.சூடாமணியைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் கூறுகிறது. அவரது படைப்பிலுள்ள கருத்து விளக்கக் கதைகளைப் பற்றியும், உணர்வுச் சிறப்புக் கதைகளைப் பற்றியும், உளவியல் சிறப்புக் கதைகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. கதைமாந்தர், கதைக்கூறுகள், உத்திகள் ஆகியவை பற்றியும் விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  •  
ஆர்.சூடாமணியின் சிறுகதைப் படைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  •  
படைப்புகளில் வெளிப்படும் சிறப்புக் கூறுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
  •  
கதைகளில் இடம் பெறும் கதைக்கரு, பின்னணி ஆகியவற்றிலிருந்து சமகாலச் சமுதாயச் சிக்கல்களை இனம் காணலாம்.
  •  
படைப்பில் கையாளும் உத்திகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பாட அமைப்பு