இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் புனைகதை குறித்தும் அதன் வகைகள் குறித்தும் விளக்குகிறது. புதினம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது. புதினம் தோன்றுவதற்கான சமூகக் காரணங்கள் குறித்து விளக்குகிறது. தமிழில் எழுந்த முதல் புதினம் குறித்தும் விளக்குகிறது. தமிழ்ப் புதின இலக்கிய முன்னோடிகள் குறித்துக் கூறுகிறது. மேலும் புதின அமைப்பு முறை குறித்தும் கூறுகிறது. புதினத்தின் கூறுகளான கருப்பொருள், கதைப்பின்னல், குறிப்பு முரண், பாத்திரப் படைப்பு, நனவோடை முறை, உரையாடல், சூழல் அமைப்பு, நடை ஆகியவை புதினங்களில் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்பது குறித்துக் கூறுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|