தன் மதிப்பீடு : விடைகள் - I

1. புதினம் என்ற சொல் பெறப்பட்ட வரலாற்றைத் தருக.

நாவல் என்னும் சொல்லுக்குப் பொருள். புதுமை என்பதாகும். ‘Novella' என்ற இத்தாலி மொழிச் சொல்லில் இருந்து இச்சொல் பெறப்பட்டது. புதுமை என்ற பொருள் அடிப்படையாக கொண்டு நாவலைத் தமிழில் புதினம் என்ற சொல் இலக்கிய வகைமைச் சொல்லாகப் பெறப்பட்டது.

முன்