2.0 பாட முன்னுரை

மேலை நாட்டவர் தொடர்பால் தமிழில் வளர்ந்த இலக்கியமே புதின இலக்கியம். அச்சுப் பொறியின் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட உரைநடையின் பெருக்கம், கவிதை வடிவில் இருந்துவந்த கதைகளை உருமாற்றி உரைநடை வடிவம் கொள்ள வைத்தது. நிகழ்ச்சி குறித்த தனிப்பாடலைச் சிறுகதை என்ற வடிவமாகக் கொண்டால் காப்பியத்தைப் புதினம் என்ற வடிவமாக ஏற்கலாம்.

இப்பாடத்தில் தமிழ்ப் புதினத்தின் தோற்றம் குறித்தும், அதன் வளர்ச்சி நிலைகள் குறித்தும் விரிவாகக் காணலாம்.