4.6. தொகுப்புரை

உ.வே.சா. வண்டமிழ் வழங்கிய வள்ளல். பைந்தமிழைக்காக்கப் பிறவி எடுத்தவர். உ.வே.சாமிநாதையர் பொதுமக்கட்குப் புரியும் வகையில் எளிய நடையில் பழகு தமிழ்ச்சொற்களைக் கொண்டு மரபு கெடாது எழுதினார்.

தெளிவான நடையில் எல்லாருக்கும் விளங்கும்சொற்களைப்பெய்து உயிரோவியத்தைப் போலத் தாம் கருதுவதைஎழுதும் ஆற்றல் சாமிநாதையருக்கு இருந்தது.

எந்த  நிகழ்ச்சியைக் கூறினாலும் அதைப் படிப்பவர் மனத்தில்பதியும்படி சுவையுடன் விரித்தெழுதுவது உ.வே.சாமிநாதையர் இயல்பு.உ.வே.சா.வின் உரைநடையால் தமிழ் உரை நடை வளம் பெற்றது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

தமிழ் மறுமலர்ச்சியின் தாயும் தந்தையுமாகத் திகழ்ந்தவர்கள் யார்?

விடை

2.

பதிப்புத்துறையின் பெருவேந்தர் யார்?

விடை

3.

உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல் எது?

விடை

4.

உ.வே.சா. தம் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மீது கொண்டிருந்த அன்பை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்?

விடை

5.

உ.வே.சா.வின் உரை நடை எவ்வாறு அமைந்துள்ளது?

விடை

6.

‘குடந்தை நகர் கலைஞர்கோ’ - யார்?

விடை