6.4 தொகுப்புரை
 

திரு.வி.க.வின் நடை இயற்கை நடையாய் ஆன பீடுநடை. நேராகச் சொல்லல், சுருங்கச் சொல்லல், சிறந்த பொருளைச் சொல்லல் ஆகிய பண்புகளோடு அமைந்த கட்டுரையே இலக்கிய வரலாற்றில் ஒரு சிறந்த இடத்தைப் பெறும் என்ற கூற்றிற்குத்தக திரு.வி.க.வின் உரைநடை தமிழ் இலக்கியத்தில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. ஒரே அளவுள்ள சிறுசிறு பகுதிகளாக அமைப்பது திரு.வி.க.வுக்குக் கைவந்த கலை. இவ்வாக்கியங்களின் இறுதிச் சொற்களாக ஒரே சொல் வரும் நிலையில் இயற்கையாக அமைப்பதன் மூலம், ஓசை இன்பத்தைச் சேர்க்கும் நிலை இவர் நடையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

“கற்பகத்தை இழந்தோம்” என்னும் தலைப்பில் திரு.வி.க. யாருடைய மறைவு குறித்து எழுதியுள்ளார்?

விடை
2.

பழைய உரையாசிரியர்களைப் போன்று திரு.வி.க. உரை எழுதிய நூல்கள் யாவை?

விடை

3.

திரு.வி.க. தமிழாக்கம் செய்த சொற்களைக் குறிப்பிடுக.

விடை