தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(4) | சேதுப்பிள்ளையின் உரைநடையில் மொழிக்கலப்பு உண்டா? |
சேதுப்பிள்ளையின் உரைநடையில் மொழிக்கலப்பு முற்றிலும் ‘இல்லை’ என்றே கூறலாம். ஆங்கில மொழிச் சொற்கள் அறவே இல்லை; தமிழ் வடிவமாகிவிட்ட சில வடசொற்களும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. |