| 
 
 தமிழ் நாட்டில் தமிழில் எழுதுவோரும் 
 பேசுவோரும்
 வடமொழிச் சொற்களை அதிக அளவில் கலந்து எழுதியும்.
 பேசியும் வந்தனர். இதன் காரணமாகத் தமிழில் வடசொற்
 கலப்பு மிகுதியானது. தமிழில் வடமொழிச் சொற்கள் நிறையக்
 கலந்திருப்பது கண்டு ஒருசிலர் ‘வடமொழியின் துணையின்றி -
 வடமொழிச் சொற்கலப்பின்றித் தமிழ் தனித்தியங்க இயலாது’
 என்ற ஒரு தவறான கருத்தை ஒரு சில நூற்றாண்டுகளுக்கு
 முன்பு உருவாக்கினர். ஆயின் பரிதிமாற் கலைஞர்,
 மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர் பெருமக்கள் ‘தமிழ்
 வடமொழிச் சொற்கலப்பின்றித் தனித்தியங்க வல்லது; எந்த
 ஒரு கருத்தையும் வடமொழிச் சொற்களின் துணையின்றித்
 தனித்தமிழ்ச் சொற்களைக் கொண்டே விளக்கிக் கூற முடியும்’
 என்று கூறி, அத்தவறான கருத்தைப் போக்க முனைந்தனர்;
 பாடுபட்டனர். மறைமலையடிகள் இந்த அரிய பணிக்காகத்
 தனித்தமிழ் இயக்கம்  என்ற  
 ஓர் இயக்கத்தைத்
 தோற்றுவித்தார். அந்த இயக்கத்தில் தனியிடம் 
 வகித்த
 பெருமையுடையவர் பாவாணர் ஆவார். 
  
 
 
 
 
  
 மறைமலை
 அடிகள் | 
   | 
 
  
 தேவநேயப் பாவாணர் | 
  
  
 
  
  பாவாணர் தமிழ்மொழியில் எழுதும்போது பிற 
 மொழிச்
 சொற்களின் கலப்பின்றி எழுத முடியும் என்பதைத் 
 தன்
 உரைநடையின் வழியே நிறுவிக் காட்டினார். இவ்வகையில்
 பாவாணரின் உரைநடைத் தனித்தன்மை உடைய தனித்தமிழ்
 நடையாகும்.  |