5.5 கண்ணதாசனின் பல்திறப்பாங்கு |
கண்ணதாசனின் வாழ்வில் பல்வேறு நிலைகள் தோன்றின.
அவற்றைப் போலவே அவரது உரைநடையிலும் பல்திறப்
பாங்கு அமைந்து இருந்தது. கண்ணதாசன்
கவிஞராக
விளங்கியது அவரது முக்கியப் பாங்கு எனினும் அதனோடு
அவரிடமிருந்து வேறு பல திறப்பாடுகளும் வெளிப்பட்டன.
அவற்றைப் பின்வருமாறு பகுத்துக் காணலாம். அவை,
(1) |
புதின எழுத்தாளர் |
(2) |
சிறுகதை ஆசிரியர் |
(3) |
மேடைப் பேச்சாளர் |
(4) |
இதழாசிரியர் |
(5) |
திரையிசைப் பாடலாசிரியர் |
(6) |
திரைப்படக் கதைவசன ஆசிரியர் |
(7) |
நாடக ஆசிரியர் |
என்பன. இவற்றைக் காணும்போது
கண்ணதாசனின்
உரைநடைத் தோட்டத்தில் பல்வேறு மலர்கள் நிறைந்து நின்று
மணம் பரப்புகின்றன என்று கூறத் தோன்றுகின்றது. |