பாடம் - 2
P10232 -
நாடகம்-தோற்றமும் வளர்ச்சியும்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழில் நாடகங்கள் எப்போது தோன்றின? எப்படி வளர்ந்தன என்பனவற்றைப் பற்றி இப்பாடம் கூறுகிறது.

நாடகத்துக்கும் கூத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கூறுகிறது.

தமிழில் இக்காலம்வரை நாடகம் வளர்ச்சி பெற்ற முறையைக் கூறுகிறது.

விடுதலை இயக்கமும் திராவிட இயக்கமும் நாடக உருவாக்கத்தில் செலுத்திய செல்வாக்கினைக் கூறுகிறது.

இப்போது நாடகத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றிக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • புராண இதிகாசக் கதைகளைத் தழுவியும், வரலாறு சமூகம் தழுவியும் தமிழ் நாடகம் எவ்வாறு வளர்ந்து வந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
  • இசைப்பாட்டு, நாடக நிலையில் இருந்து உரையாடல் நாடக நிலைக்கு மாற்றம் பெற்றதைத் தெரிந்து கொள்ளலாம்.
  • தமிழ்க்கலை வளர்ச்சியில் நாடகத்தின் பங்கு என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • விடுதலை இயக்க நாடகங்களில் நாடக நாயகர்களின் தேசபக்தி எவ்வாறு ஒளிர்ந்தது என்பதை அறியலாம்.

பாட அமைப்பு