கவிதை, 
 கல்வெட்டு, இசை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு 
 துறைகளிலும் தம் முத்திரையைப் 
 பதித்தவர் கவிமணி
தேசிகவிநாயகம் அவர்கள். அவர் கவிதையை 
 உயிராக
 நேசித்தவர். 
 கவிமணியின் கவிதைகள் 
 உணர்ச்சி நிறைந்தவை. ‘என் எழுத்தும் 
 தெய்வம்; என் எழுதுகோலும் 
 தெய்வம்’ என்று கூறிய பாரதியின் கவிதைகளில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் கவிமணி.“பாட்டுக்கொரு 
 புலவன் பாரதியடா - அவன் 
	பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா 
	கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா ! - அந்தக் 
	கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா.” என்ற பாடலைக் கவிமணி பாடியதன் மூலம் அவருக்குப் பாரதி 
 மீதிருந்த மதிப்பை உணர்ந்து கொள்ளலாம். 
 எளிமையாகப் பாடுபவர்; இனிமையாகப் பாடுபவர். குழந்தைகளுடன் 
 குழந்தையாக வாழ்ந்தவர். பழமையின் பாதுகாப்பில் 
 புதுமைக்குப் பாலம் அமைத்தவர். இத்தகைய சிறப்புடைய கவிமணியின் 
 உள்ளத்தை இனிக் காணலாமா?   |