நாமக்கல் கவிஞர் பிறப்பதற்கு
முன்னரே அவருடைய
தாயார் பலராலும் புகழப்பட்டார். பிறக்கும் குழந்தை ஆணாக
இருக்கும் என்று பலர் வாழ்த்தினர். ‘சிறந்த அறிவாளியாகவும்
நிறைந்த ஆயுள் உடையவராகவும் விரிந்த புகழுடையவராகவும்
உம் மகன் விளங்குவான்’ என்று அந்தணர் ஒருவர் பாராட்டியது
அனைத்தும் கவிஞர் வாழ்வில் உண்மையாயிற்று. ‘எட்டாவது குழந்தை கட்டி அரசாளும்' என்ற பழமொழிக்கு
ஏற்ப, கவிஞர் தமிழ் நாட்டில் கவிதை உலகில் தனிப்பெரும்
மன்னராக, அரசவைக் கவிஞராக விளங்கினார். இதற்குக்
காரணம் அவர் இளமைப் பருவத்தில் பெற்ற கல்வியாகும்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதற்கு
நாமக்கல் கவிஞர் சிறந்த சான்றாவார்.
கல்வி
ஆரம்பக் கல்வி : நம்மாழ்வார் பள்ளி, நாமக்கல்.
உயர்நிலைக் கல்வி : கோவை மெட்ரிகுலேஷன் பள்ளி.
கல்லூரிக் கல்வி : பிஷப் ஈபர் கல்லூரி, திருச்சி.
திருமணம்
கவிஞருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி
முத்தம்மாள். அவர் வயிற்று வலியால் 1924இல் இறந்து
விடுகிறார். அவர் வேண்டுகோளுக்கேற்ப, அவர்தம் தங்கை
சௌந்தரம்மாளை மணக்கிறார் கவிஞர். அவர் மூலமாகப் பிறந்த குழந்தைகள் ஐவர். பெண்கள் இருவர்; ஆண்கள் மூவர்.
ஓவியப் புலமை
நாமக்கல் கவிஞர் நான்காம் வகுப்புப் படித்துக்
கொண்டிருந்தார். அப்பொழுது நம்மாழ்வார் என்ற ஆசிரியர்
ஒரு
கணக்குக் கொடுத்திருந்தார். எல்லா மாணவர்களும்
கணக்குப்
போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இராமலிங்கம்
மட்டும்
அன்றைய நாடக விளம்பரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த
கமலஇந்திரசபா நாடகப் படத்தைப் பார்த்து, பார்த்துத்
தம் பலகையில் எழுதிக் கொண்டிருந்தார். ஆசிரியர் கணக்கைக்
காட்டச் சொன்னார். இராமலிங்கம் ஓவியத்தைக் காட்ட பளீர்
என அடி விழுந்தது. உயர்நிலைப் பள்ளியிலும் இது தொடர்ந்தது.
மற்றொரு நிகழ்ச்சியையும் இங்கே சுட்டிக்காட்டலாம்.
கல்லூரியில் ஆங்கிலக் கட்டுரை ஒன்று எழுத முதல்வர்
பணித்தார். அதை எழுதி முடித்துவிட்டு, இராமலிங்கம்,
முதல்வர் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருப்பதை
அப்படியே வரைந்தார். இதைப் பார்த்த முதல்வர் அவரைப்
பாராட்டினார். கட்டுரை எழுதிய திறத்தையும், ஓவியம் வரைந்த
திறத்தையும் பாராட்டி, பைபிளையும் கட்டுரை எழுதுவது எப்படி
என்ற ஒரு நூலையும் பரிசாகத் தந்து, ஓவியக் கலைப் பயிற்சியை
விடாமற் செய்து வருமாறு ஊக்கப்படுத்தினார்.
இராமலிங்கம் பிள்ளை, தம் நண்பரும் சிறந்த
வழக்குரைஞருமான நாகராஜ ஐயங்காரின் தூண்டுதலால் திரு.
இராமகிருட்டிணர், திரு. விவேகானந்தர், திலகர்,
அரவிந்தர்,
லஜபதிராய் முதலிய தலைவர்களைப் படமாக
வரைந்தார்.
அந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி
அமைத்தார்.
ஓவியப் புலமை கைவரப் பெற்றவர் கவிஞர்
என்பதை
இதனால் அறிய முடிகின்றதல்லவா?
ஓவியத்தின் மூலம் வருமானம் ஈட்டல்
கவிஞர் இராமலிங்கத்தின் ஆசான்
திரு.வி. லட்சுமணன் தம் வேலையிலிருந்து ஓய்வு
பெற்றபோது அவருடைய படத்தை நாமக்கல் நகர
மண்டபத்தில் திறந்து வைக்க, அவருடைய மாணவர்கள்
விரும்பினர். அதற்கு இராமலிங்கம் பிள்ளை படம் வரைந்து
கொடுத்தார். அப்படம் நகர மண்டபத்தில் திறந்து
வைக்கப்பட்டது. தொழில் துறையில் வருவாயும், வெற்றியும்
இராமலிங்கத்துக்கு தேடிக் கொடுத்த படம் இதுவாகும்.
இதுவரையில் இராமலிங்கத்தின் பிறப்பு, சூழல்,
கல்வி, திருமணம், ஓவியப்புலமை ஆகியவற்றைப்
பார்த்தோம்.
இனி, கவிஞரின் படைப்புகளைப் பற்றி அறியலாம்.
|