5.4 சமூக உணர்வு | ||
நாமக்கல் கவிஞர் காந்தியம், தேசியம், தமிழுணர்வு பற்றியும் தமிழன் குறித்தும் ஏராளமான பாடல்கள் பாடியதிலிருந்து அவருடைய காலத்தின் தேவையை அறியமுடிகிறது.
இனி, அவர் சமூகம் சார்ந்து சிந்தித்திருப்பதைப் பார்க்கலாம்.
|
||
5.4.1 வறுமை | ||
புதிய சமுதாயம் என்ற தலைப்பில்,
பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் ஏழை என்றும் பணக்காரன் என்றும் பிரித்துக் காண்பதையும் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறார். |
||
5.4.2 பெண்ணின் பெருமை | ||
ஏனைய நாடுகளைக் காட்டிலும், தமிழ்நாட்டில்தான் பெண்கள்
இறை நம்பிக்கையோடும், பாவ புண்ணியங்களிலும் விரதங்களிலும்
நம்பிக்கையோடும் வாழ்ந்து வருகின்றனர்.
o அன்பும் ஆர்வமும் உடையவர்கள் பெண்கள். எனப் பெண்ணின் பெருமை பேசுகின்றார். |