6.0 பாட முன்னுரை

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசனின் கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்; பொதுவுடைமையை விரும்பியவர்; ஏழைகளின் வாழ்க்கையைக் கவிதையாக்கியவர்; இளமையிலிருந்தே சுயமரியாதையோடு வாழ்ந்தவர்; மக்களின் நிலை உயர எழுதியதாலும், அவர்கள் படும்பாட்டையும் பண்பாட்டையும் அவர்கள் புரிந்து கொள்ளும் முறையில் எழுதியதாலும் ‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்பட்டவர். பொது மக்கள் புரிந்து கொள்ளும் படியாக எளிய பாடல்களைப் பாடித் திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்.