பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின்
கவிதை வானில் முழுநிலவாய் விளங்கியவர். பாரதிதாசன் ஒரு புரட்சிக்
கவிஞர். பிறவிச் சிந்தனையாளர். கவிதை உலகில் ஒப்பாரும்,
மிக்காரும் இல்லாது விளங்கியவர். பாரதியின் சிந்தனைக்கு
மெருகேற்றியவர் பாரதிதாசன். பாரதிதாசன் பாடாத பொருள்கள்
இல்லை. அவர் ஓர் உலகச் சிந்தனையாளர். தமிழ்ப் பற்றாளர்.
ஒரு பொதுவுடைமைக் கவிஞர். தமிழையே உயிரெனக் கொண்டு விளங்கிய
ஏந்தல். பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் எளிய நடையில் இன்பத்தமிழாக
அமைந்தவை என்பதை இப்பாடம் விளக்குகிறது.