பாட்டுக்கொரு புலவன் பாரதிக்குப்
பின் தேசியம் பாடும் கவிதை உலகில் தனக்கென ஒரு முத்திரை
பதித்தவர் நாமக்கல் கவிஞர். விடுதலை வேண்டிப் பாடியவர்.
காந்தியின் மீது எல்லையற்ற அன்பும், மதிப்பும் கொண்டவர்.
அவரின் வாழ்க்கை, கவிதை எழுதிய சூழல், பின்னணி ஆகியவற்றை
இந்தப் பாடம் விரிவாக எடுத்துக் கூறுகிறது.