காலத்தை வென்ற கவிஞர்; முறையாகக்
கல்வி பயிலாதவர்; மக்களைப் பாடியவர்; மக்களுக்காக, மக்கள்
மொழியில் எழுதியதால் மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர்;
இத்தகைய சிறப்புகளையுடைய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்
வாழ்வும், படைப்பும் பற்றிய தகவல்களைத் தருகிறது இப்பாடம்.
இத்தகவல்களின் மூலம் ஏழைகளின் நலிவையும், நாட்டுப்புற மக்களின்
பழக்க வழக்கங்களையும், கலை மரபுகளையும், மண்ணின் மணத்தையும்,
விவசாயத் தொழிலின் சிறப்பையும் இப்பாடம் விளக்கிக் காட்டுகிறது.